இலங்கையில் கட்டுமான நடவடிக்கை எனும் போர்வையில் பாரிய மோசடிகள். தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 months ago


நாடளாவிய ரீதியில் வீடுகளைக் கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல் மற்றும் கட்டுமான நடவடிக்கை எனும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாகன மோசடி தொடர்பில்         சந்தேகத்தின் அடிப்படையில் கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

போலி ஆவணங்களைத் தயாரித்து ஒரு கோடி 30 லட்சம் பெறுமதியான காரை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட நபரிடம்            மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பமுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இருவரும் வாகனக் கடத்தல் மட்டுமின்றி பாரியளவிலான வீடு விற்பனை மோசடிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

அண்மைய பதிவுகள்