கொழும்பில் சமூகப் பிறழ்வாக இயங்கிய இரண்டு விடுதிகளை நடத்திய வியட்நாமியப் பெண்கள் குழு கைது

1 month ago



வாடிக்கையாளர்களிடம் இருந்து 35,000 ரூபாய் முதல் 50,000 வரை கட்டணம் வசூலித்து, கொழும்பில் சமூகப் பிறழ்வான முறையில் இயங்கிய இரண்டு விடுதிகளை நடத்திய வியட்நாமியப் பெண்கள் குழுவொன்று கைது            செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினர் இந்த கைது நடவடிக்கையை நேற்று முன்தினம் மேற்கொண்டனர்.

இதன்படி, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வோர்ட் பிளேஸில் உள்ள வீடு ஆகியவற்றில் இருந்து, குடிவரவு திணைக்களத்தினர், ஏழு பெண்கள் உட்பட ஒன்பது வியட்நாம் நாட்டவர்களை கைது செய்தனர்.

சமூக ஊடகங்கள் ஊடாக மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்படும் விடுதியொன்றைப் பற்றி அறிந்து கொண்டு,

பம்பலப்பிட்டியில் உள்ள இடத்துக்கு செல்ல இரகசிய திட்டத்தை பயன்படுத்தியதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த வெளிநாட்டவர்களும் கடந்த செப்ரெம்பர் மாதம் 30ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கை வந்ததாகவும், நாட்டில் தங்கி சட்டவிரோத வியாபாரத்தை நடத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு தமது விஸாவை நீடித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

குறித்த தவறான நடத்தையில் ஈடுபடும் விடுதியின்                          உரிமையாளரான மற்றொரு      வியட்நாமிய நபர் டுபாயில் இருந்து இயங்கி வந்ததும், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் குழுவினரும் டுபாயிலிருந்து      வந்தவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் இருந்து          தெரியவந்துள்ளது.