யாழ்.தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
2 months ago
யாழ்.தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் காரை மீட்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
பொலிஸ் நிலையத்தில் காரின் இலக்கத் தகட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அது போலியானது எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன் காரில் இருந்த ஆவணங்களும் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.
இது குற்றச் செயல்களுடன் தொடர்புடைய காராக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கார் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.