யாழ்.ஆறுமுக நாவலர் கலாசார மண்டபத்தை வாக்குச் சாவடியாக பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை.
யாழ்.ஆறுமுக நாவலர் கலாசார மண்டபத்தை வாக்குச் சாவடியாக பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்கவிடம் சர்வதேச இந்து மத பீடம் கோரியுள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் செயலாளர் இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், சிறீலசிறீ ஆறுமுகநாவலர் பெருமான் என்ற உன்னத புருஷரை சைவத் தமிழ் உலகம் என்றும் நினைவில் கொள்ளும் வகையிலும் அவர் தம் கொள்கைகளை பேணும் நினைவாலயமாக ஆறுமுக நாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட் டது.
பொதுச் செயல்பாடுகளுக்கும் பொதுச் சேவைகளுக்கும் இந்த மண்டபம் கடந்த காலங்களில் பயன் படுத்தப்பட்டு வந்தபோதிலும் அதன் புனிதத் தன்மையை பேண வேண்டும் என்ற விடயம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
நாவலர் கலாசார மண்டபம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், அங்கு புனிதம் பேண வேண்டிய கட் டாயம், ஆன்மீக ஸ்தலமாக அந்தமண்டபம் போற்றப் படவேண்டிய தன்மை மற்றும் ஆசாரங்கள் பேணப் பட வேண்டியதன் அவசி யம் முதலான இன்னோரன்ன காரணங்களால் கடந்த காலத்து நிர்வாகங்களோடு முரண்பட்டு இன்று வழக்கில் இந்தக் கலாசார மண்டபம் உள்ளது.
தற்போது, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் அதிக கவனம் எடுத்து இந்த மண்டபத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
தேர்தல் முதலான பொது விட யங்களில் கடமைக்கு அமர்த் தப்படுகின்றவர்களுக்கு இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவதில் நிச்சயம் அசெளகரியம் ஏற்படும். அது இந்தக் கலாசார மண்டபத்தின் புனிதத்தையும் சட்டதிட்ட நடைமுறை களையும் விமர்சனத்துக்கு உள்ளாக்கும்.
எனவே, தயவு செய்து இத்தகைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த மண்டபத்தை வாக்குச் சாவடியாகப் பயன்படுத்தும் செயல்பாட்டை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றுள்ளது.