துணிவிருந்தால் பாகிஸ்தான் கடலில் இந்தியா மீன் பிடித்துப் பார்க்கட்டும்! சவால் விடுகிறார் சுப்பிரமணியம்.

4 months ago


இலங்கை சிறிய நாடு என்ற வகையில் வாய்க்கு வந்தது போல் சில குற்றச்சாட்டுகளை நீங்கள் முன் வைக்கின்றீர்கள். உங்களுக்குத் துணிவிருந்தால் பாகிஸ்தானுக்கு அண்டிய பகுதியில் அல்லது அந்த நாட்டு எல்லைக்குள் சென்று மீன் பிடித்து பாருங்கள் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணை யத்தின் தலைவர் என்.வி சுப்பிர மணியம் சவால் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.

எமது கடல் எல்லைக்குள் வரும் இந்திய மீனவர்களைத் தான் எமது கடற்படை கைது செய்கின்றது. நல்ல எண்ணத்துடன் இருக்கின்ற சில கடற்கரையினர் அவர்களை கைது செய்யக்கூடாது என்ற எண் ணத்தோடு விரட்டியடிக்கின்றார்கள். இல்லாவிட்டால் அனைவரையும் கைது செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

குறிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு படகுகளை கைது செய்தால் ஒரு மாதத்தில் 20 அல்லது 24 படகுகள் கைது செய்ய வேண்டி ஏற்படும். 2016 இல் இருந்து 2024 வரையான 8 வருடங்களுக்குள் அண்ணளவாக 2500 படகுகளை அவர்கள் கைது செய்திருக்க முடியும். பெரும்பாலும் ஒன்று இரண்டு படகுகளை கைது செய்து விட்டு மிகுதி படகுகளை விரட்டித்தான் விடுகின்றார்கள். இது இவ்வாறு இருக்கையில் இந்தியாவிலிருந்து ஒரு அப்பட்டமான பொய்யை பரப்புகின்றார்கள்.

எங்கள் நாட்டுக்குள்ளே வந்து எங்கள் வளங்களையும், வாழ்வா தாரத்தையும் கொள்ளை அடித்துச் செல்கின்றன இந்திய இழுவைப் படகுகள், கொள்ளையடித்துச் சென்றுவிட்டு, கடற்படை உங்களை விரட்டியடிக்கும் பொழுது எங்கள் கடற்படை கொள்ளை அடிப்பதாக பொய்யான தகவல்களை சொல்கின்றவர்கள். எமது வளங்களைக் கொள்ளையடிக்கின்ற நீங்கள் கொள்ளையர்களா? அல் லது விரட்டியடிக்கின்ற நாங்கள் கொள்ளையர்களா? என்பதை நினைத்து பார்க்கவேண்டும்.

வரலாற்றில் இதுவரைக்கும் எமது மீனவர்கள் எல்லையை தாண்டி போய் எந்த ஒரு கெடுதலான செயல்களையும் செய்யவில்லை. சிறிய நாடு இலங்கை என்ற வகையில் வாய்க்கு வந்தது போல் சில குற்றச்சாட்டுகளை நீங்கள் முன்வைக்கின்றீர்கள்.

உங்களுக்குத் துணிவிருந்தால் உங்களுக்கு அயலில் உள்ள சிறிய நாடான பாகிஸ்தானுக்கு அண்டிய பகுதியில் அல்லது அந்த நாட்டு எல்லைக்குள் சென்று மீன்பிடித்து பாருங்கள். அங்கே சவால் விட முடியாமல், சீனாவுடன் சவால் விட முடியாமல், பல வருடங்கள் போரினாலும், பொருளாதாரத்தா லும் பாதிக்கப்பட்ட கீழ் நிலையில் இருக்கின்ற எமது இலங்கையை நீங்கள் பரிகாசம் செய்கின்றது போல சில விடயங்களை பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்.

சமீபத்தில் ஜெய்சங்கர் இலங்கை -இந்திய மீனவர்களிடத்தில் ஒரு பேச்சுவார்த்தையை நடத்தி நிரந்தர தீர்வு ஒன்றினை எட்ட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கின் றார். அதற்கு அமைவாக அண்ணா மலையும் அவருடன் இணைந்து செயல்படுகின்றமையை எண்ணி சந்தோசப்படுவதுடன் அதனை வரவேற்கத்தக்க விடயமாகவும் கருதுகின்றோம் - என்றார். 

அண்மைய பதிவுகள்