அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நடைமுறைப்படுத்திய 78 நிர்வாக நடவடிக்கைகளை இரத்துச் செய்துள்ளார் ட்ரம்ப்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நடைமுறைப்படுத்திய 78 நிர்வாக நடவடிக்கைகளை இரத்துச் செய்துள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு பதவியேற்றுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு தேவைப்படும் 270 தொகுதிகளை விடவும் அதிகமாக 312 தொகுதிகளில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இதன் ஊடாக, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று உரையாற்றிய டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை அறிவிப்பதற்கும்,போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிப்பதற்கும் திட்டமிட்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ட்ரம்ப் பல உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 78 நிர்வாக நடவடிக்கைகளை இரத்துச் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.