குத்துவிளக்குச் சின்னத்திற்குப் பதிலாக, சங்கு சின்னத்தைப் பயன்படுத்த முயற்சிகளை எடுக்கின்றோம்- கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு

3 months ago


சங்கு சின்னத்தை தவிர்க்கக் கோரும், தமிழ் மக்கள் பொதுச் சபையின் தீர்மானம் ஏகமனதானதல்ல.” இவ்வாறு தெரிவித்துள்ளார் ரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்.

தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் செப்ரெம்பர் 26 தீர்மானத்திற்கு அமைய சங்கு சின்னத்தைப் பெறுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பில் நேற்று ஊடகங்க ளுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது..


தமிழ் மக்கள் பொதுச்சபையின் திருகோணமலை தீர்மானம், சங்குச் சின்னத்தைப் பெற்றுக்கொள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு எடுத்த ஏகமனதான முடிவை மாற்றியமைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செப்ரெம்பர் 26ஆம் திகதி, தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு எடுத்த ஏகமனதான தீர்மானத்திற்கமைய, குத்து விளக்குச் சின்னத்திற்குப் பதிலாக, சங்கு சின்னத்தை மாற்றியமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியே வெளியேறியதாகவும், தாம் அதிலிருந்து வெளியேறும் முடிவை எடுக்கவில்லை என்றும், ஆகவே அவர்கள் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு திரும்பி வரவேண்டும் என்றும் கருணாகரம் சுட்டிக்காட்டினார்.