கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆலங்கேணி பிரதேசத்தில் பாலத்தின் அடியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

4 months ago


கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, ஆலங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர் பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தின் அடியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது நேற்று(20.08.2024) இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா, மஹரூப் நகர், 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முஹம்மது லெப்பை முபாரக் (60 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

கடைக்கு செல்வதாக நேற்று (20) மாலை 5.00 மணிக்கு மனைவியிடம் கூறிவிட்டு, வந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரிய வந்திருப்பதாகவும், இரவு 7 மணி அளவில் சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் கிண்ணிய வைத்திய சாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.