பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை தகிக்கும் நிலைக்குத் தள்ளியுள்ள சமீபத்திய வெப்ப அலைகளினால் வெப்பநிலை செல்ஸியஸ் அளவீடுகளின் முப்பதுகளின் மத்திக்கும் அதிக அளவுக்குக் கொண்டு சென்றுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் பிரின்ஸ் ஜார்ஜ் மற்றும் டம்ப்ளர் ரிட்ஜ் முதல் வடக்கே கியூஸ்னல் மற்றும் வில்லியம்ஸ் ஏரி வழியாக கம்லூப்ஸ், ஒகனகன் மற்றும் கூட்டெனாய் பகுதிகள் அடுத்த வாரம் வரை பெரிய அளவில் வெப்ப எச்சரிக்கையின் கீழ் உள்ளன என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்துள்ளது.
கிரான்புரூக், கெலோனா, நகுஸ்ப், போர்ட் ஹார்டி மற்றும் வெர்னான் ஆகிய பகுதிகள் அனைத்தும் வெள் ளிக்கிழமை உயர் வெப்பநிலை பதிவுகளை முறியடித்ததை அடுத்தும், கெலோனா 38.6 டிகிரியை எட்டியதை அடுத்தும் இந்த எச்சரிக்கைகள் வந்துள்ளன.
லிட்டன் பிரதேசம் சனிக்கிழமையன்று, அந்நாளில் கனடாவின் மிகுந்த வெப்பமான இடமாக இருந்தது. பிற்பகலில் அங்கு வெப்பநிலை 41 பாகை செல்ஸியஸை எட்டியது.