மூன்று நாள்கள் தொடர் காய்ச்சலால் யாழ்.புங்குடுதீவைச் சேர்ந்த சிறுமி சிகிச்சையின் போது உயிரிழந்தார்
மூன்று நாள்கள் தொடர்ச்சியான காய்ச்சலுக்கு உட்பட்டிருந்த சிறுமியொருவர், சிகிச்சையின்போது பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்
யாழ்.புங்குடுதீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த, கிருஷ்ணகுமார் அபிஷா (வயது-4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
சிறுமிக்குக் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் புங்குடுதீவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், காய்ச்சல் குணமடையாத நிலையில், அவர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அதன் பின்னர், அந்தச் சிறுமி புங்குடுதீவில் 100 உள்ள தனது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் மீண்டும் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, புங்குடுதீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அந்தச் சிறுமி முன்னதாகவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமோனியா காய்ச்சல் காரணமாகவே அந்தச் சிறுமி உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுமிக்கு மருத்துவம் வழங்கிய தனியார் மருத்துவமனையின் கவனக் குறைவும் இறப்புக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை ஊர்காவற்றுறை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி என்.தியாகராஜா மேற்கொண்டார், ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
T