இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

3 months ago


இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (23) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் மிகவும் எளிமையாக அநுரகுமார திஸநாயக்க 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவியேற்றார்.

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திஸநாயக்க தெரிவானார். அவர், 12 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவானார்.

அநுரகுமாரவின் இந்த              வெற்றியானது இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகவும் இறுக்கமான வெற்றியாகும்.

போட்டியிட்டவர்களில் எவருக்கும் 50சதவீத வாக்கு கிடைக்காத நிலையில் இரண்டாவது சுற்று விருப்பு வாக்குகள் மூலம் அநுரகுமார திஸநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதியாக தெரிவான அநுரகுமார திஸநாயக்க நாட்டின் முதல் இடதுசாரி தலைவராவார்.

அநுரகுமாரவின் கழகத்தில் கல்விகற்றார். 1995ஆம் ஆண்டு பௌதிக விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றார்.

பல்கலைக்கழக பட்டம் பெற்று வெளியேறிய அதே ஆண்டில்        ஜே. வி. பியின் மத்திய செயல்குழு. அரசியல் குழுவுக்கு உள்வாங்கப்பட்ட அநுரகுமார        ஜே. வி. பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் நெருங்கி செயல்பட்டு வந்தார்.

2000ஆம் ஆண்டு தேர்தலில்     ஜே.வி. பியின் தேசியப் பட்டியல்  எம். பியாக முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு தெரிவானார் அநுரகுமார.

தொடர்ந்து 2001ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் தேசியப் பட்டியல்       எம். பியானார்.

2004ஆம் ஆண்டு குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அநுரகுமார சந்திரிகா தலைமையிலான அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

பின்னர், 2005ஆம் ஆண்டு ஜே. பி. அரசாங்கத்திலிருந்து   வெளியேறியதைத் தொடர்ந்து அமைச்சு பதவியை துறந்தார். .

2014ஆம் ஆண்டு ஜே.வி.பி.         தலைவர் சோமவன்ஸ அமரசிங்கவின் மறைந்தார். இதையடுத்து, புதிய தலைவராக அநுரகுமார தெரிவானார்.

2015 - 2018 வரை பாராளுமன்றில் எதிர்க்கட்சியின் தலைமை கொறடாவாக பணியாற்றினார்.

2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை உருவாக்கி அதன் தலைவராகவும் தெரிவானார்.

அந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அவர் 4 இலட்சத்து 18 ஆயிரத்து 553 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தார்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார போட்டியிடுவார் என்பதை 2023 ஒகஸ்ட் 29ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அறிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது. 

அண்மைய பதிவுகள்