சுவிஸ் தமிழர் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

1 month ago



சுவிட்ஸர்லாந்து நாட்டில் வாழும் தமிழ்பேசும் தொழில் முனைவோர்களுக்கிடையில் கூட்டுறவையும் ஒன்றிணைவையும் பலப்படுத்தி தமிழ் மக்களின் அறிவியல், சமூக, பொருளாதார, ஆன்மீக கலை பண்பாட்டு பாரம்பரிய அலகுகளை கட்டியமைத்தல், தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் சமூக மேம்பாட்டினையும் இலக்காகக் கொண்டு சுவிஸ் தமிழர் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவகம் உருவாக்கப்பட்டுள்ளது.

தலைவர் இளையதம்பி சிறிதாஸ் தலைமையில் சூரிச் கில்டன் கார்டன் விடுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சுவிஸ் நாட்டில் வாழும் தமிழ் வர்த்தகர்களும் பெருந்தொகையான சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

சுவிஸ் நாட்டில் வாழும் தொழில் முனைவோர்களுக்கிடையில் கூட்டுறவு ஒற்றுமை, கூட்டுமுயற்சிக்கு பங்காற்றுவதுடன் தமிழர்களின் கலைகலாச்சார பொருளாதார அறிவியல் உட்பட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு பங்காற்றல். அனைத்து அரசுகளின் ஒத்துழைப்புடன் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் உற்பத்திகளை அதிகரிக்கக்கூடிய தொழில் முயற்சிகளை இயற்கை வளங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் செயற் திட்டங்களை வகுத்து செயற்படுத்த உள்ளதாகவும் அமைப்பின் தலைவர் இளையதம்பி சிறிதாஸ் தெரிவித்தார்.

அத்துடன் உலகளாவிய ரீதியில் உள்ள தனவந்தர்கள் தொழில் அதிபர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் நிபுணத்துவ சேவையினையும் பெற்றுக் கொண்டு இலங்கையில் புதிய முதலீடுகள் தொழில் முயற்சியாண்மை வேலைத்திட்டங்களில் ஈடுபடவிரும்பும் தொழில் முனைவோருக்கு ஆலோசனைகளையும் ஒத்தாசைகளையும் வழங்கவுள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சுவிஸ்நாட்டில் வாழும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அமைப்பின் உறுப்புரிமையைப் பெறமுடியும் என அமைப்பின் செயலாளர் இராசமாணிக்கம் ரவிந்திரன் தெரிவித்தார்.

அண்மைய பதிவுகள்