தொழில் சட்டத்தில் திருத்தம் செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும் -சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து
7 months ago
தொழில் சட்டத்தில் உரிய ஆலோசனையின்றி திருத்தங்கள் மேற்கொள்வதை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையும், வேறு சில அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் உரிய ஆலோசனைகள் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்கள் சர்வதேச நியமங்களை மீறுவதாக காணப்படுகின்றன.
தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்வாங்கப்படவில்லை. குறிப்பாக ஆடைகைத்தொழில் துறையில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னர் வெளிப்படையான கலந்துரையாடல்களை நடத்திய பின் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.