சுமார் 45 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப் பொருளை பயண பொதிக்குள் மறைத்து கடத்த முயற்சித்த 21 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடிய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி இந்த கஞ்சா போதைப் பொருளை ஜெர்மனிக்கு கடத்த முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
கனடிய எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த பயணப் பொதியை சோதனையிட்டுள்ளனர்.
கடத்தப்படவிருந்த கஞ்சா போதைப் பொருளின் சந்தைப் பெறுமதி 180000 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
21 வயதான ரெனி ஹஸ்தானா ஹென்றி என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான அடிப்படையில் போதைப் பொருளை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்தார் என இந்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த பெண் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.