யாழ்.பருத்தித்துறை, தும்பளை கடல் கொந்தளிப்பால் கட்டுமரம் புரண்டதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் லூத்துமாதா கோவிலடி, தும்பளையைச் சேர்ந்த திருச்செல்வம் ஞானப்பிரகாசம் (வயது- 69) என்பவராவார்.
நேற்றுத் திங்கட்கிழமை காலை 7: 30 மணியளவில் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக கட்டுமரத்தில் சென்றார்.
கரையிலிருந்து 300 மீற்றர் தூரத்தில் அவர் சென்ற கட்டுமரம் கடல் கொந்தளிப்பு காரணமாக புரண்டது.
கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் சடலத்தை மீட்ட சக மீனவர்கள் உடலை கரைக்கு கொண்டு வந்து பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைத் தனர்.
இவரது மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே. பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார்.