கொழும்பு கோட்டையில் இருந்து காங்கோசன்துறை வரையான புகையிரத சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பம்

2 months ago




கொழும்பு கோட்டையில் இருந்து காங்கோசன்துறை வரையான புகையிரத சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பம் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து    எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படவுள்ளது.

காலை 9.30 மணிக்கு அனுராதபுரத்துக்கும் பகல் 1.23 க்கு காங்கேசன்துறைக்கும் செல்லும் இதேவேளை பகல் 1.45க்கு புறப்படும் ரயில் மாலை 6.15க்கு அனுராதபுரத்துக்கு செல்லும்.