மத்திய ஆபிரிக்க கொங்கோ இகியுடர் மாகாணத்தில் புரிசா ஆற்றில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தனர்.100 பேரைக் காணாவில்லை
மத்திய ஆபிரிக்க கொங்கோ இகியுடர் மாகாணத்தில் புரிசா ஆற்றில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தனர்.100 பேரைக் காணாவில்லை
ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காணாமல் போயுள்ளனர்.
மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள நாடு கொங்கோ. இந்த நாட்டின் இகியுடர் மாகாணத்தில் புரிசா என்ற ஆறு பாய்கிறது.
இந்த நிலையில், இகியுடர் மாகாணத்தில் இருந்து அண்டை நகருக்கு புரிசா ஆற்றில் படகு ஒன்று புறப்பட்டது.
அந்த படகில் 150இற்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு அந்தப் படகில் புறப்பட்டு சென்றனர்.
ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் வீழ்ந்து தத்தளித்தனர்.
இந்தக் கோர விபத்தில் ஆற்றில் மூழ்கி 38 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 100 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.