யாழில் உள்ள உறவினர்களைச் சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்தவர் உயிரிழந்தார்.

2 months ago


யாழில் உள்ள உறவினர்களைச் சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்தவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள  உறவினர்களைச் சந்திப்பதற்காக லண்டனில் இருந்து வருகை தந்தவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

கணேசராசா தியாகராசா (வயது 56) என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். போதனா மருத்துவமனையில் இவ்வாறு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் கடந்த 16ஆம் திகதி கொழும்பில் இருந்து பேருந்தில் வந்த போது மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த    நிலையில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

அண்மைய பதிவுகள்