இலங்கையில் பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவ பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவிப்பு.
3 months ago
பாடசாலைகளில் நடைபெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் நடைபெறும் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற விசேட நிகழ்வுகளுக்காகப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடுவது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றமையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.