
யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் வியாழக்கிழமை பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளைக் கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பேருந்தினை மறித்து சோதனையிட்டனர்.
அதன் போது பேருந்திலிருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து (ரி.என்.ரி) மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து, அதனை கொண்டு வந்த அரியாலை பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
