வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட காற்றுச் சுழற்சி நாளை(11) யாழ்ப்பாணத்தை அண்மிக்கும்.-- வானியல் அவதானிப்பாளர்கள் கணிப்பு
1 month ago
வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி நாளை(11) யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் என்று வானியல் அவதானிப்பாளர்கள் கணித்துள்ளனர்.
நேற்று மாலை திருகோணமலைக்கு தென்கிழக்காக 600 கிலோமீற்றர் தொலைவில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்தபடி நலிந்த காற்றுச்சுழற்சியாகவே அது நீடித்து வந்தது.
இந்தக் காற்றுச் சுழற்சி அதே திசையில் பயணித்தால் நாளை யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்றுச் சுழற்சி வடக்கை அண்மிக்கும் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் 50 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.