கற்பனையில் இப்படியும் சிந்திக்கலாம்...தமிழினத்தின் தற்கால நிலையினை

தன் நிலையுணராத தேசிய இனத்தின் நிலை 2700 ஆண்டு கால அரசியல் பின்னடைவு ....

சேர,சோழ, பாண்டியர் நாடாண்ட காலத்தில் இருந்து அதன் பின்னர் இன்று சிரட்டையில் கஞ்சி குடிக்கும் நிலை வரை....

உலகத்தின் முதல் மொழிக்கு பாரம்பரியத்திற்கும் உரித்துடைய தமிழினத்தின் நிலையை பார்..

நிலம் ஆண்டு , அறம் காத்து , வீரம் வளர்த்து , அறிவு செழிக்க மானம் காத்த வீரப் பரம்பரையின் தற்கால நிலையை பார்...

உன் நிலம் எங்கே, வீரம் எங்கே, அறம் எங்கே, உன் அறிவெங்கே...? இதற்கு மேலான உன் அதிகார ஆட்சி எங்கே...?

அம்பேத்கர் அரசியலமைப்பு எழுதும் போது சொன்னார் இந்நிலப்பரப்பின் மூத்த மொழியும் தமிழ் முதல் குடியினரும் தமிழர் என்றார். இதற்கு மேலதிகமாக இந்தியா முழுமைக்கும் உரிமை கோரும் உரிமை தமிழருக்கு மட்டுமே உண்டு என்றார்.

சூழ்ச்சி சூழ்ந்ததா....? அல்லது பழிவாங்கப்பட்டோமா...?

தமிழ் நாடு என்று பெயரளவில் நாடு தந்தார்கள் பின் அந்த நாடாளும் உரிமையை தமிழர் அல்லாதவர்களுக்கு வழங்கினார்கள்.

விட்டார்களா...? தமிழ் நாட்டில் தனிநாட்டு கோசம் மேலெலாமல் ஈழத்தை நோக்கி தனிநாட்டு கோசத்தை வலுப்படுத்தினார்கள். அதற்கு முழு ஆதரவையும் கொடுத்தார்கள்.

ஈழத்தில் நிழல் அரசு நடத்த ஆரம்பித்து நடத்தியும் காட்டினோம் தமிழர்.

பலம் பெறும் போது 23 நாடுகளாக சேர்ந்து நின்று அழித்தார்கள் ...

அவனியில் மூத்த குடிகளாகிய நாம் சிறு கூறுகளாக்கப்பட்டோம்....

இதுவா பிரித்தாளும் தந்திரோபாயம் .....?

தமிழ் நாட்டு தமிழர்கள் என்றோம் , ஈழத் தமிழர்கள் என்றோம் , மலேசியத் தமிழர்கள் என்றோம் , சிங்கப்பூர் தமிழர்கள் என்றோம் பல பிரிவினைக்குள் ஆளானோம்...

இறுதியில் புலம்பெயர் தமிழர்கள் என்றும் ஆனோம் ...

விட்டார்களா எமது ஒற்றுமைக்கு...?

பாரேங்கும் வாழும் தமிழர்கள் தமிழர்களாக ஓரணியில் நின்றால் உலகம் உன்னடியில் கைகட்டும் என்ற உண்மையறியுமா எம் தலைமுறை...?

2009 ஆம் என்ன சாதாரண ஆண்டா...? நிலத்துடன் தமிழர்களிடம் இருந்த நடைமுறை அரசு நிலமற்று நாடு கடந்ததாயிற்று....

நாடு கடந்தாலும் பரவாயில்லை பொருண்மியமற்று நின்றது புலத்தில் ....

பொருண்மியம் கச்சிதமாய் நாம் தமிழருக்கானது. நிலமற்று பொருளற்ற அரசு கடந்த அரசாயிற்று .

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்ன உலகத்தின் கண்களில் படாமலா நடந்தது....? உலகமே முன்னின்று நடத்தியது இதுவே சத்தியம்..

உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற தமிழ் குலத்தில் உப்பில்லா கஞ்சியை குடிக்கச் செய்தது இந்த உலகம். யாரடா காரணம் ....?

இன்று ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் நினைவுகளிலும் உப்பில்லாத கஞ்சி சிரட்டையில் குடிக்க வைத்து வேடிக்கை பார்க்கின்றது இந்த உலகம்...

அதை கூட தடுக்கும் கூட்டம் ஒன்று ..... என்ன சொல்ல என் தமிழ் குலமே?

நிலமாண்ட மூத்த மொழிக்கு சொந்தக்கார தேசிய இனம் இன்று சிரட்டை வைத்து உப்பற்ற கஞ்சி பருகும் போது நான் ஆண்ட குலத்தின் இழிநிலை கண்டு குமிறுகின்றது குருதிக் குழாய்கள் ...

உண்மை ஒன்று உரைக்கின்றேன் கேள் ... நாம் மொழியால் திரட்சி கொண்டு , அறிவால் ஆராய்ந்து உலகை நோக்கி அரசியல் செய்ய வேண்டும்.

ஏன் என்றால் தமிழால் தான் தரணியாள முடியும்.

அண்மைய பதிவுகள்