கனடாவின் மத்திய அரசாங்கம் மக்களுக்கு 250 டொலர் காசோலைகளை அனுப்பி வைக்க உள்ளது.
குறிப்பாக கடந்த ஆண்டில் 150000 டொலர்கள் அல்லது அதற்கும் குறைந்த தொகையை வருமானமாக ஈட்டியவர்களுக்கு இவ்வாறு காசோலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 250 டொலர் பெறுமதியான காசோலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொடுப்பனவாக இந்தத் தொகை அனுப்பி வைக்கப்பட உள்ளது அடுத்த ஆண்டு இந்த காசோலைகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் ஏற்கனவே அரசாங்கம் சில சலுகைகளை அறிவித்துள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் இந்த பண்டிகை காலத்தில் வரி சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பல்வேறு பொருட்களுக்கு இவ்வாறு வரிச்சலுகை வழங்கப்பட உள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் கனடிய அரசாங்கம் காசோலைகளையும் அனுப்பி வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.