மட்டக்களப்பு காரைதீவிலிருந்து இம்முறை பல்கலைக்கழகம் செல்லும் 33 கல்விச் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
லண்டனில் வாழும் காரைதீவைச் சேர்ந்த வைத்திய நிபுணர் அருளானந்தம் வரதராசன் தனது பெற்றோர் சார்பில் ஸ்தாபித்த அமைப்பின் ஏற்பாட்டில் காரைதீவு விபுலானந்த கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக சம்மாந்துறை ஆதார மருத்துவமனை சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் நடேசன் அகிலன் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் கோ. அருணன், காரைதீவு பிரதேச சபை செயலாளர் ஏ. சுந்தரகுமார், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ. பார்த்தீபன், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.