யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த வைத்தியக் கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த வைத்தியக் கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்ற சித்த மருத்துவ பீடச்சபை கூட்டத்தில் நடத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 04 மேலதிக வாக்குகளைப் பெற்று கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் சித்த மருத்துவ அலகாகச் செயல்பட்டு வந்த சித்த மருத்துவ கற்கை அலகு கடந்த ஜூலை 26 ஆம் திகதி பீடமாகத் தரமுயர்த்தப்பட்டது.
சித்த மருத்துவ பீடத்தில் நஞ்சியல் மற்றும் பரம்பரை மருத்துவம், மனித உயிரியல், சமூகநல மருத்துவம், சிரோரோகமும் அறுவை மருத்துவமும், நோய் நாடல் சிகிச்சை, குண பாடம், மூலதத்துவம் ஆகிய கற்றல் துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சித்த மருத்துவ அலகு பீடமாகத் தரமுயர்த்தப்பட்ட நாளிலிருந்து முன்னாள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான விவியன் சத்தியசீலன், பதில் பீடாதிபதியாகச் செயல்பட்டு வந்தார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
