யாழ்.மத்திய பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர்.
4 months ago
தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரிய நேத்திரனை ஆதரித்து பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் 'நமக்காக நாம்' பிரசாரப் பயணத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமான பரப்புரை நடவடிக்கையில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பிரதி நிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.