திருகோணமலை - வீரநகர் கரையோரப் பகுதி குடியிருப்புகள் கடலுக்குள் உள்வாங்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
3 months ago

திருகோணமலை - வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புகள் திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கடலரிப்பு காரணமாக அப்பகுதி கடலுக்குள் உள்வாங்கப்பட்டு வருவதாகவும் இவ்வாறான காட்சியை தம் வாழ்வில் முதல் முறை காண்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
கடலரிப்பினால் கடற்கரையை அண்டி காணப்படும் சில வீடுகளின் மதில்கள், அத்திபாரம், சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.
இக்கடற்பகுதியில் பாரிய இரும்புப் பின்னல் தொகுதியொன்று கரையின் நீளமான பகுதிக்கு வெளிவருவதாகவும் இது என்ன என்பது தொடர்பில் அறிய முடியாதுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
கடலரிப்பில் இருந்து தம்மை பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
