வயல் காவலாளியை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றவரை கைது செய்வதற்கு பொலிஸார் மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

4 months ago


திருகோணமலை, ஸ்ரீபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மம்பில கிராமத்தில் பிள்ளையார் கோயில் சந்தி பகுதிக்கு கடந்த 16 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வயல் காவலில் ஈடுபட்டிருந்த நபரொருவரை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இந்நிலையில், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, இந்தப் புகைப்படங்களில் காணப்படும் சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் 071 859 1181 ~ 025 225 5062 தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அண்மைய பதிவுகள்