சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்.

3 months ago


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (01) காலை 10 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க அலுவலகம் மற்றும் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் சிறுவர்கள் பங்குகொண்ட          கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ்தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?,

பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே இறந்துகொண்டு இருக்கின்றோம்,

இராணுவத்தினரின் கையில் கையளிக்கப்பட்ட சகோதரங்கள் எங்கே? என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பை முன்னெடுத்துள்ளனர்.

இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட் டில் யாழ்ப்பாணம் ஐ.ஓ.எம். அலு வலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிறு வர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.


அண்மைய பதிவுகள்