யாழில், மகளை தனியார் கல்வி நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற தந்தை மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
3 months ago

இதன் போது ஊரெழு கிழக்கு, ஊரெழு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் கிருபரஞ்சன் (வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் காலை மகளை கல்வி நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கு மோட்டார் சைக்கிளை எடுத்துள்ளார்.
இதன்போது அவருக்கு உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளை விட்டு வந்து கதிரையில் இருந்தவேளை மயக்கமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சடலம் மீது உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
