இலங்கை அரசு 15 அமைப்புகள், 210 தனிநபர் சொத்தை முடக்கியது

7 months ago

இலங்கை அரசாங்கம் 15 அமைப்புகள் மற்றும் 210 தனிநபர்களின் சொத்துகளை முடக்குவதாக அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தேசிய தவ் ஹீத் ஜாமத், நாடு கடந்த தமிழீழ அரசு, கனேடிய தேசிய தமிழ் கவுன்ஸில், புலம் பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் இளைஞர் பேரவைகள் உள்ளிட்ட 15அமைப்புகளின் சொத்துகளும், இவற்றுடன் தொடர்புடையவர்களினதும் இவற்றுக்கு நிதி ஆதாரங்களை வழங்கும் 210 தனிநபர்களினதும் சொத்துகளே இவ்வாறு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை, பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்களைப் பலப்படுத்தியமை உள்ளிட்ட குற்றங்களுக்காகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.