இலங்கையில் பணவீக்கம் மேலும் அதிகரிப்பு.

5 months ago


2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, 2024 ஜூலை மாதத்திற்கான கொழும்பு நகர சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 2.4% ஆக அதிகரித்துள்ளது. 

இது ஜூன் 2024 இல் 1.7% ஆக பதிவாகியிருந்தது.

உணவு வகையின் ஆண்டு பணவீக்கம் ஜூலை 2024 இல் 1.5% ஆக உயர்ந்ததுள்ளதுடன், ஜூன் 2024 இல் அது 1.4% ஆக நிலவியது.

மேலும், 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் 2.8% ஆக அதிகரித்துள்ளதுடன், 2024 ஜூன் மாதத்தில் அந்த பணவீக்கம் 1.8% ஆக காணப்பட்டதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.