பங்களாதேஷில் மாணவர் போராட்டம் நாட்டில் மோதலை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5 months ago


பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நாட்டில் மோதல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கண்ணீர் புகைப் பிரயோகத்தை நடத்திய பொலிஸார், வதந்திகள் பரவாமல் தடுக்க இணையத்தள வசதியை நிறுத்தவும் நடவடிக்கை எடுத்தனர்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு 30% வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவை திரும்பப் பெறக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த மோதலில் இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.