தேசிய மக்கள் சக்தி அரசின் முதலாவது வரவு - செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்குப் பெரிதளவில் நன்மைகள் இல்லை

2 months ago



தேசிய மக்கள் சக்தி அரசின் முதலாவது வரவு - செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்குப் பெரிதளவில் நன்மைகள் இல்லை என்று புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

2025 ஆம் ஆண்டுக்கான இந்த வரவு - செலவுத் திட்டம் அரச துறை மற்றும் தனியார் துறையில்

அரச துறையினரின் அடிப்படைச் சம்பளம் 15,500 ரூபாவால் அதிகரிப்பு.

தனியார் துறையினரின் 21 ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆயிரம் ரூபாவாகவும், 2026 ஜனவரி மாதம் 30 ஆயிரமாகவும் அதிகரிக்கத் தனியார் தரப்பின் சேவை வழங்கல் சங்கம் இணக்கம்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மஹாபொல கொடுப்பனவு 7500 ரூபாவாகவும், மாணவர் கொடுப்பனவு 6500 ரூபாவாகவும் அதிகரிப்பு.

இதற்காக 4600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வடக்கு - கிழக்கு மீள்குடியேற்றம் மற்றும் வீட்டு நிர்மாணிப்புக்கு 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்தச் சம்பளத்தைத் தடையின்றிப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை.

தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 4,268 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்  கடமையாற்றுவோருக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்த்த சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய முன் -மொழிவுகள் வருமாறு:-

கொடுப்பனவு 1000 ரூபாவால் அதிகரிப்பு.

ஊடகவியலாளர்கள் மற்றும் கலைத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு கொட்டாவ பகுதியில் வீட்டுத்திட்டம் முன்னெடுப்பு.

யாழ். நூலக அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

ஏனைய பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு அபிவிருத்திக்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

வடக்கு மாகாணத்தில் தெங்கு பயிர்ச்செய்கைக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

அஸ்வெசும நலன்புரி செயற்றிட்டத்துக்காக 232.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் புதிதாக 2 இலட்சத்து 80 ஆயிரம் பயனாளர்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பு.

நீரிழிவு நோயாளர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 10,000 ரூபாவாகவும், வயோதிபர்களுக்கான கொடுப்பனவு 5,000 ரூபாவாகவும் அதிகரிப்பு.

கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் போசனை உணவு வழங்கலுக்காக 7500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

திரிபோசா வழங்கல் சேவைக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

ஜனாதிபதியின் வரவு - செலவுத்திட்ட உரை இணைக்கப்பட்டுள்ளது.


அண்மைய பதிவுகள்