கொழும்பு நோக்கி இன்று பயணித்த ரயிலில் செல்பி எடுத்த ரஷ்ய பெர்மினோவா ஒல்கா உயிரிழந்தார்

2 months ago



பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று புதன்கிழமை காலை பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ரஷ்ய நாட்டுப் பிரஜையான பெர்மினோவா ஒல்கா என்ற 51 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.

பதுளை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள அமுனுவெல்பிட்டிய பகுதியில் உள்ள சுரங்கப் பாதையைக் கடந்து ஓடும் ரயிலில் செல்பி எடுத்துக்கொண்டிருந்த மேற்படி பெண் தவறி கீழே வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் அதே ரயிலில் ஹாலிஎல ரயில் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பதுளை போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பதுளை போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிலெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்