கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை பெண் நோயியல் மருத்துவ நிலையமானது தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் உள்ளது.

5 months ago


கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பெண் நோயியல் மருத்துவ நிலையமானது தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது என்று பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்து அரசின் சுமார் 5 ஆயி ரத்து 320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த மே மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவால் இந்தக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

போதிய ஆளணி வளம் இன்மையால் குறிப்பாக கதிரியக்க நிபுணர்கள் இன்மையால் இந்த சிகிச்சை நிலையம் தொடர்ந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது என்று கூறப்படு கிறது. நவீன வசதி கொண்ட இரு சத்திர சிகிச்சை கூடங்களே இயங் காத நிலையில் காணப்படுகின்றன. எனவே ஆளணி வளங்களை நிய மிப்பதற்கோ அல்லது ஏற்கனவே மருத்துவமனையில் இருக்கின்ற ஆளணி வளங்களைக் கொண்டோ இந்த சிகிச்சை நிலையத்தை இயங்க வைப்பதற்கு மத்திய மற்றும் மாகாண சுகாதார அமைச்சுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.