யாழ்.வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தத்தில் கடலில் மாயமானவர் மீட்கப்படவில்லை!

3 months ago


யாழ்.வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தத்தில் கடலில் மாயமானவர் மீட்கப்படவில்லை!

வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தத்துக்கு சென்று கடலில் நீராடிய போது காணாமல் போனவர் நேற்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்தம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போது, கடலில் நீராடிய அம்பனைச் சேர்ந்த கந்தசாமி வினோகரன் (வயது-54) என்பவர் உயிரிழந்தார்.

அன்றைய தினம் சாவகச்சேரி - நுணாவிலைச் சேர்ந்த தயாசீலன் வைஷ்ணவன் (வயது -28) என்பவர் கடலில் நீராடியபோது காணாமல் போயிருந்தார்.

அவர் தனது தாயருடன் ஆலயத் துக்கு சென்றிருந்த நிலையில், தாயரிடம் உடைமைகளை ஒப்படைத்து விட்டே கடலில் நீராடினார் என்று கூறப்படுகின்றது.

நேற்று முன்தினம் வரை காணாமல் போனவரை தேடும் பணி தொடர்ந்த போதும் அவர் கண்டுபிடிக்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டது.



அண்மைய பதிவுகள்