கனடாவில் பெண்கள் செய்த குறும்பு, 2 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான சேதத்தை ஏற்படுத்தியது
கனடாவின் ஒன்ராறியோவில், நான்கு பதின்மவயதுப் பெண்கள் செய்த குறும்பு ஒன்று, 2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
ஒன்ராறியோவிலுள்ள Oshawa என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டின் மீது முட்டைகளையும் கற்களையும் வீசிய நான்கு பதின்ம வயதுப் பெண்கள், பின்னர் அந்த வீட்டுக்குத் தீவைத்துள்ளார்கள்.
தீ மளமளவென பரவி, பல வீடுகளுக்குப் பரவியுள்ளது.
என்றாலும், வீடுகளிலிருந்தவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறியதால் தப்பியுள்ளார்கள்.
இதற்கிடையில், தீயால் ஏற்பட்ட சேதம் 2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது.
தீ வைத்தவர்களை பொலிசார் கைது செய்ய, பாதிக்கப்பட்டவர்கள், அந்த பெண்களுடைய வயதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
காரணம், தீவைத்த நான்கு பெண்களுமே 12 முதல் 16 வயது வரையுள்ளவர்கள்!
குறும்பு என்ற பெயரில் அவர்கள் செய்த செயல், 2 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான அளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பலர் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எத்தகைய தண்டனை விதிக்கப்படும் என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், அந்த தீவைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் தாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாக சிலர் தெரிவிக்க,
சிலர் அந்த இடத்தைக் காலி செய்து வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள்.