சாவகச்சேரி வைத்தியசாலைக்கு மின்பிறப்பாக்கி வழங்கி வைப்பு

5 months ago


யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதன் இன்று வழங்கி வைத்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கான மின்சார மாற்றீடுகள் (Power Backup) இல்லாத நிலை தொடர்பில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது.

குறிப்பாக, வைத்தியசாலையில் கடமையாற்றி, தற்போது விடுமுறையில் உள்ள பதில் வைத்திய அத்தியட்சகர் Dr. Ramanathan Archchuna இதுதொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அதனடிப்படையில், மேலதிக மின்பிறப்பாக்கியின் அவசியத்தை கருத்தில்கொண்டு வைத்தியசாலைக்கு தற்காலிக அடிப்படையில் அதனை பெற்றுக் கொடுப்பதாக கடந்த 07.07.2024 அன்று அங்கஜன் இராமநாதன் உறுதியளித்திருந்தார்.

அவ்வாக்குறுதிக்கமைய, 150kVA வலுவுடைய மின்பிறப்பாக்கியொன்று தற்காலிக அடிப்படையில் இன்றையதினம் (10.07.2024) வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த மின்பிறப்பாக்கியை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் Dr. கோபாலமூர்த்தி ரஜீவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நிரந்தர மின்பிறப்பாக்கியை பெற்று வைத்தியசாலையில் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கான அறையொன்றை (Generator Room) அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் Dr. கோபாலமூர்த்தி ரஜீவ் தெரியப்படுத்தியுள்ளார்.

மின்பிறப்பாக்கி கையளிப்பு நிகழ்வில், சாவகச்சேரி பிரதேச இணைப்பாளர் டுபாகரன், சாவகச்சேரி நகர சபை எல்லைக்குட்பட்ட எனது வட்டாரப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


அண்மைய பதிவுகள்