இயக்குநர் ரவிஷங்கர் தற்கொலை செய்து கொண்டார்

5 months ago


2002ஆம் ஆண்டு மனோஜ் நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரவிஷங்கர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் விக்ரமன் திரைப்படங்களில் பணிபுரிந்தவரும், 2002ஆம் ஆண்டு வெளியாகி கவனமீர்த்த வருஷமெல்லாம் வசந்தம் பட இயக்குநருமான ரவி ஷங்கர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளது தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தினை இயக்கியதுடன் அப்படத்தின் அனைத்து பாடல் வரிகளையும் எழுதியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சூர்யவம்சம் திரைப்படத்தில் இடம்பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ எனும் பிரபல பாடலின் வரிகளை எழுதியதும் இவரே. 

சென்னை, கே.கே.நகரில் உள்ள தன் வீட்டின் அறையில் நேற்றிரவு இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.63 வயதான ரவி ஷங்கரின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்