யாழ் கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரியின் ஊழல் அம்பலம்

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரிக்குள்ள கணக்காய்வுக் குழு இறங்கீற்றுதாம். இறங்கீற்றுதாம் என்றதும் பிரச்சினை முடிஞ்சுதாம் என்றில்லை, இப்படி பிரச்சினைகள் பல நடக்கும் கணக்காய்வுக் குழு இறங்கும் பின்னர் தீர்வின்றி கிடப்பில கிடக்கும் இது தான் அடிக்கடி நடக்கிற கதை.

கடந்த வாரம் இந்தக் கல்லூரிக்குள் கணக்காய்வுக்குழு இறங்கின முறையைப் பார்த்தால் கிணற்றில் இருந்து பூதம் எழும்பினது போல பிரச்சினை இருந்ததாம்.

இந்தக் கல்லூரியில் ஆசிரிய மாணவ, மாணவிகள் சேரும் போதே பலதை இழக்கிறார்கள். அங்க நடத்திற கொண்டாட்டத்துக்கு ஆசிரிய மாணவ மாணவிகளிடம் காசை பறிக்கிறதில இருந்து, கல்லூரிக்கு தேவையான மண்வெட்டி, கத்தி என்று ஏதாவது ஒன்று எல்லோரும் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி நிர்வாகம் கேட்டதிற்கு இணங்க மாணவ மாணவிகள் கொடுத்தனர். அங்கே படிக்கிற 350 ஆசிரிய மாணவ, மாணவிகளும் மண்வெட்டி, கத்தி என்று ஏதாவது ஒன்று கொண்டு வந்தவையாம், கொண்டு போகாட்டில் பிள்ளைகளில் அக்கறை எடுக்காமல் விட்டுவிடுவினம் என்று மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

கல்லூரிக்கு கொண்டு வந்த அந்தப் பொருள்கள் சில நாள்களிலேயே காணாமல் போய்விட்டதாம். ஏலவிற்பனையில் கொடுத்திருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

கணக்கறிக்கை ரீம் கல்லூரிக்கு வருகிறது என்றதும் அவசர அவசரமாக வெளியில் இருந்து சில மண்வெட்டி, கத்திகளை அந்தக் கல்லூரி விரிவுரையாளரான பாலகணேசன் கல்லூரிக்குள் கொண்டு வந்து சேர்த்தார்.

கல்லூரியில் இருந்த சி.சி.ரி கமெராவில பிடிபட்டுவிட்டதாக கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமா ஓய்வுபெற்றுப் போன பீடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பல விரிவுரையாளர்களின் சம்மதமின்றி அரச நிர்வாக பிரமாணங்களுக்கு முரணாக கல்விசாரா ஊழியர்களால் தங்கப்பவுண் அணிவித்தவையாம், இந்து மாமன்றம் சார்பாக அன்பளிப்பு கேடயமும் வழங்கினர். இந்த கேடயத்துக்கு ஆசிரிய மாணவ, மாணவிகளிடம் இருந்து 200 ரூபாய் வீதமும், மணிவிழாவுக்கு 300 ரூபா வீதமும் அறவிட்டுள்ளனர்.

மணிவிழா மலருக்கான அனுசரணை, கல்லூரிக்கு உணவு பெறப்படுகின்ற கடைகள், மற்றும் மாணவர்களின் கணக்கு பேணப்படுகின்ற வங்கிகளிடம் பணம் பெறப்பட்டுள்ளது. கல்லூரியின் கணக்கில வரவு செய்யப்படாமல் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரிய மாணவ, மாணவிகளின் சீருடைக்காக ஒருவரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாவாக மொத்தம் 20 இலட்சம் ரூபாவை சேர்த்ததாக சொல்லப்படுகிறது. கணக்காய்வுக்குழு வந்து பார்த்து கையும் களவுமாக பிடிபட்டு விட்டனர்.

இந்த வரவுகளை கல்லூரிக்காரர் எந்தவொரு கணக்கிலும் வரவு வைக்கவில்லை.

இந்தக் கல்லூரியில இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையின் தரம் 1இல் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்காக கடமையை கவனித்தல் பதவிக்கு நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சைக்கு மேற்படி நேர்முகத் தேர்வு 10.01.2024 இடம்பெற்றது.விரிவுரையாளர் பாலகணேசன் நேர்முகத் தேர்வு சபையை அவமதித்து நடந்ததுடன், நேர்முகப் பரீட்சையை இடையில் குழப்பி வெளியேறினார்.பீடம் உட்பட நேர்முகப்பரீட்சை குழு வேடிக்கை பார்த்துவிட்டு அதை பெருமையாய் பேசினர்.

26.01.2024 மீண்டும் நேர்முகப்பரீட்சை சபையால் நடத்தப்பட்டது நிதி, நிர்வாக பதவி கூட தமக்கு வேண்டாம் என எழுத்து மூலம் தெரிவித்தவர்களுக்கு இரு வாரங்களுக்குப் பின்னர் பீடத்தால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நேர்முகப்பரீட்சையின் முடிவுகள், புள்ளிகள் கூட வெளிப்படுத்தப்படாமல் மறைக்கப்பட்டது. தெரிவில் உரியவர்களுக்கு தெரிவிக்கப்படாமல் ஏமாற்றுகின்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாரை யார் ஏமாற்றுவது, இதில் ஏமாற்றுபவர்கள் யோசிக்க வேண்டும் கல்வியெல்லோ, இதில் பிழைவிட்டால் ஏமாற்றுபவர்களையும் கண்டிப்பாக ஏமாற்றும்.


அண்மைய பதிவுகள்