ஒன்றாரியோ உணவு வங்கிக்கு கடந்த ஆண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை தந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 months ago


நாடு முழுவதும் உணவுப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளமையே இதற்கான காரணம் என்று பசி- நிவாரண அமைப்புகளின் வலையமைப்பால் வெளியிடப்பட்ட புதிய தரவு தெரிவிக்கிறது.

மாகாணம் முழுவதும் உள்ள 1,200க்கும் மேற்பட்ட உணவு வங்கிகள் மற்றும் பசி நிவாரண அமைப்புகளின் வலையமைப்பினால் நேற்று இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 1, 2023 முதல் மார்ச் 31, 2024 வரை 1,001,150 பேர் உணவு வங்கிக்குச் சென்றுள்ளனர், இது கடந்த ஆண்டை விட 25 சதவீதம் அதிகமாகும் என்று குழு கூறியது.

இது 2019-2020 இலிருந்து 134 சதவீத உயர்வைக் குறிக்கிறது.

ஒன்றாரியோவில் உணவுப் பாதுகாப்பின்மைக்கான முக்கிய காரணம் வாழ்க்கைச் செலவில் விரைவான அதிகரிப்பு மற்றும் 'மாகாணம் முழுவதும் உணரப்படும் உயர்ந்த பொருளாதார பாதிப்பு' என்று அதன் தரவு காட்டுகின்றது.