இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா பறிமுதல்

5 months ago


தமிழ்நாடு காரைக்குடி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 124 கிலோ கஞ்சா பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி கஞ்சா ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் இருந்து காரைக்குடிக்கு கடத்தி வரப்பட்டதாகவும் காரைக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைக்குடி பொலிஸ் உதவி ஆய்வாளர் சுற்றுக் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஓரிடத்தில் கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டு இருந்த நிலையில் அதன் அருகே நின்றிருந்த மூன்று பேர் பொலிஸாரை கண்டதும் காரில் ஓட்டம் பிடித்துள்ளனர்.

எனினும் சமயபுரம் அருகே உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் அந்தக் கார் தடுத்து நிறுத்தப்பட்டு அதில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விசாரணையின் போது தங்களிடம் ஒப்படைக்கப் படும் கஞ்சாவை உரிய இடத்தில் சேர்த்தால் ரூபா முப்பதா யிரம் கிடைக்கும் என்றும் அதற்காக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகவும் கைதானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.