ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் வாக்களிப்பதற்கு 8 இலட்சத்து 99 ஆயிரத்து 268 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

5 months ago


நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் வாக்களிப்பதற்கு 8 இலட்சத்து 99 ஆயிரத்து 268 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியல் கடந்த 15 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.

இதற்கு அமைவாக யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேரும், கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 907 பேருமாக 5 இலட்சத்து 93 ஆயிரத்து 187 பேரும், வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார் நிர்வாக மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 பேரும், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 பேரும், வவுனியா நிர்வாக மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 585 பேரு மாக 3 இலட்சத்து 6 ஆயிரத்து 81 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள னர்.