ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பான பல கோப்புகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து மாயம்
ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பான பல கோப்புகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து காணாமல்போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டமை மற்றும் அவரது மனிதாபிமான மற்ற சித்திரவதை மற்றும் பலத்த காயங்கள் தொடர்பான விசாரணை தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக போத்தல ஜயந்த தெரிவித்துள்ளார்.
தமக்கெதிரான குற்றம் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற போதே அவர் இதனைத் கூறியுள்ளார்.
அரசியல் தஞ்சம் பெற்று தற்போது அமெரிக்காவில் வசிக்கும் போத்தல ஜெயந்த, இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து தம் மீதான தாக்குதல் தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார்.
2009ஆம் ஆண்டு தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் 2017ஆம் ஆண்டிலும் உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.
அத்துடன், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.