

திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட கதிரவேலு சண்முகம் குகதாசன் சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து கடந்த ஜூலை 02 ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இவர் பதவியேற்றார்.
திருகோணமலை, திரியாயைப் பிறப்பிடமாகக் கொண்ட குகதாசன், நீண்ட காலம் கனடாவில் வசித்து வந்தார்.
2020 முதல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளைத் தலைவராகப் பணியாற்றுகிறார். 2020 பாராளுமன்றத் தேர்தலில் குகதாசன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 16,770 வாக்குகளைப் பெற்றார்.
இத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உறுப்பினரையே தமிழரசுக் கட்சி பெற்றது. இரா. சம்பந்தனுக்கு அடுத்து அதிக வாக்குகளை பெற்ற அடிப்படையில் இவர் சம்பந்தனின் மறைவை அடுத்து பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
