தெற்கு காஸாவில் கிழக்கு கான் யூனிஸ் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் 39 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதன் மூலம் காஸாவில் இதுவரை யிலான பலி எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி அன்று ஆரம்பித்த காஸா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை 39, 006 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 89, 818 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1, 139 என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் காஸாவில் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று கிழக்கு கான் யூனிஸ் மீது இஸ்ரேலின் புதிய தாக்குதலைத் தொடர்ந்து 39 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என்றும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜோர்டானின் வெளிவிவகார அமைச்சர் அய்மன் சபாடி இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண் டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், "காஸா, குழந்தைகளின் கல்லறையாக மட்டும் மாறவில்லை. இது சர்வதேச சட்டத்துக்கான கல்லறையாக மாறியுள்ளது, ஒட்டுமொத்த சர்வதேச ஒழுங்கின் அவமானகரமான கறையாக மாறியுள்ளது. இது ஒரு போர்க் குற்றம்" என்றும் தெரிவித்துள்ளார். வெஸ்ட் பேங்கில் இரண்டு நாட்களுக்கு ஒரு பலஸ்தீன குழந்தை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் முகமை (யுனிசெப்) தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களில் மொத்தம் 143 பலஸ்தீன குழந் தைகள் உயிரிழந்தனர். இது முந்தைய ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 250 சதவீதம் அதிகமாகும். அதாவது, "பல ஆண்டுகளாக, கிழக்கு ஜெருசலேம் உட்பட வெஸ்ட் பேங்கில் வசிக்கும் குழந்தைகள் கொடூரமானவன் முறைக்கு ஆளாகியுள்ளனர்" என்று யுனிசெப் நிர்வாக இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்.