ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு இராஜாங்க அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.
4 months ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அந்தப் பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷனடி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோரே உடனடியாக நடைமுறைக்கு வரும்
வகையில் பதவி நீக்கப்பட்டுள்ளனர். அரசமைப்பில் 47(3)அ பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தற்துணிவு அதிகாரத்தின் கீழ் இந்தப் பதவிநீக்கங்கள் செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.