அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கோல்ப் மைதானத்துக்கு விளையாட சென்ற ஜனாதிபதி வேட்பாளர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள வெஸ்லி ரூத், தனது வாக்கை கடைசியாக ஆளும் ஜனநாயக கட்சிக்கு செலுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“என்னை போன்ற வாக்காளர்களுக்கு ட்ரம்ப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளார். அது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது" என்று எக்ஸ் தளத்தில் ரூத் பதிவிட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, கோல்ப் மைதானத்துக்கு வெளியே இருவருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
ட்ரம்ப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.