நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் சந்தர்ப்பமே இந்த ஜனாதிபதித் தேர்தல். அதனை வெளிப்படுத்தவே தமிழ்ப் பொது வேட்பாளர். எம்.பி செல்வம் அடைக்கலநாதன்.

4 months ago


நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் சந்தர்ப்பமே இந்த ஜனாதிபதித் தேர்தல். அதனை வெளிப்படுத்தவே தமிழ்ப் பொது வேட்பாளர். அவருக்கு அளிக்கும் ஆதரவே நாம் ஒரு தனி இனம் - தேசிய இனம் - ஒன்றாக இருக்கிறோம் என்பதை உலகத்துக்கு வெளிப்படுத்தும் செய்தி. இதனை எல்லோரும் சேர்ந்து உருவாக்க வேண்டும் - இவ்வாறு ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பரப்புரை கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு தேர்தலுக்காக உருவாக் கப்படவில்லை. மக்களின் பலம் இந்த அணிக்கு கிட்டவேண்டும். எமது மக்கள் அங்கீகாரம் தரவேண்டும்.

நாம் அனைவரும் ஓர் அணியாக இருந்து செயல்படும் வாய்ப்பு தேர்தலில் ஏற்படுமாக இருந்தால் மக்கள் சக்தியாக ஐ. நா. கதவை தட்ட முடியும். தமிழர்கள் உணர்வோடு இருக்கிறார்கள் என்பதை காட்ட வேண்டும்.

எதிர்வரும் 21ஆம் திகதி நாம் பொது வேட்பாளருக்கு இடும் புள்ளடிகள் வீரப் புள்ளடிகளாக மாற்றப்பட வேண்டும். இந்த கட்டமைப்பு மக்களுக்காகத் தொடர்ந்து போராடும் - என்றார்.